Connect with us
 

News

விஜய் நடிக்கும் தி கோட் படத்தில் நடித்து முடித்த சிவகார்த்திகேயன் !

Published

on

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் தி கோட். இப்படத்திற்கு பின்னர் இன்னும் ஒரு படம் மட்டுமே நடிப்பார் அதன் பின்னர் முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளார்.

தற்போது தி கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ளது. தற்போது இப்படத்தின் VFX மற்றும் டி.ஏஜிங் பணிகளுக்காக வெங்கட் பிரபு மற்றும் விஜய் ஆகியோர் அமெரிக்கா சென்று திரும்பினர். இந்த வாரத்துக்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விடுமாம்.

இந்த நிலையில் இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் இவர் சம்மந்தமான காட்சிகளை வெங்கட் பிரபு அண்மையில் படமாக்கியுள்ளார். ஒரு கிரிக்கெட் மைதானத்தில் சிவகார்த்திகேயன் இருப்பது போன்ற காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளதாம்.