News
விரைவில் வெளியாகவிருக்கும் அயலான் பட டீஸர் அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம் !

இயக்குநர் ரவிகுமார் இயக்கத்தில் கே.ஜே.ஆர் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் அயலான்.
இப்படம் தீவாளி திருநாள் அன்று திரைக்கு வரும் என்று படக்குழு சில தினங்களுக்கு முன்னர் அதிகாரபூர்வமாக அறிவித்தது. அயலான் படத்துக்கு போட்டியாக தீபாவளி அன்று கார்த்தி நடிக்கும் ஜப்பான், ராகவா லாரன்ஸ் – எஸ்.ஜே சூர்யா நடிக்கும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்களும் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் அயலான் படத்தின் தயாரிப்பு நிறுவனமான KJR Studios நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது அதில் மிக விரைவில் அயலான் படத்தின் டீஸர் வெளியிட போகிறோம் என அறிவித்துள்ளது.