Trailer

வியக்க வைக்கும் அயலான் ட்ரைலர் வெளியானது !

Published

on

இயக்குநர் ரவி குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், இராகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அயலான். தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஏலியனை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம்.

மிக நீண்ட கால தயாரிப்பில் இப்படம் உருவாகி வந்தது. இந்த நிலையில் இப்படம் ஜனவரி 12ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் அயலான் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. சுமார் 2 :19 நிமிடம் இந்த ட்ரைலர் ஓடுகிறது.

வழக்கமாக சினிமா என்றால் ஒரு கிரகத்தில் இருந்து ஒரு ஏலியன் வரும் இங்கு வந்து பூமியை அழிக்கும் இதுதான் கதையாக இருக்கும். ஆனால் இந்த படத்தில் ஏலியன் உதவியோடு பூமியை காப்பது மாதிரியான புதுமையாக இப்படம் உருவாகியுள்ளது. கண்டிப்பாக இந்த ட்ரைலரை பார்க்கும் போது ஓரளவு கதையை நம்மால் புரிந்து கொள்ள் முடிகிறது. குறிப்பாக ஏ.ஆர்.ரஹ்மான் பின்னணி இசையும் விஷுவல் காட்சிகளும் நம்மை வியக்க வைக்கிறது.

 

Trending

Exit mobile version