Connect with us
 

News

வசூலில் சாதனை படைத்து வரும் சிவகார்த்திகேயனின் டாக்டர் !

Published

on

சிவகார்த்திகேயனின் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த சனிக்கிழமை திரையரங்குகளில் வெளியான திரைப்படம் டாக்டர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தும் வகையில் இப்படம் காமெடி, ஆக்‌ஷன் என அனைத்திலும் நல்ல படமாக இருந்தது. இதன் காரணமாக இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோகமான ஒரு வரவேற்பு கிடைத்துள்ளது.

மக்களின் அந்த வரவேற்பால் வசூலில் சாதனை படைத்துள்ளது என்றே சொல்ல வேண்டும். முதல் மூன்று தினங்களில் ரூபாய் 25 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 50 சதவீத இருக்கைகள் மட்டுமே திரையரங்குகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையிலும் டாக்டர் திரைப்படம் இந்த அளவுக்கு வசூலித்துள்ளது என்பது திரையுலகினரை வியப்படைய வைத்துள்ளது.

இந்த வாரம் ஆயுத பூஜை விடுமுறையும் வருவதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்க வாய்யுள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.