Connect with us
 

News

நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகிறதா டாக்டர் திரைப்படம் !

Published

on

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் டாக்டர். சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் யோகிபாபு, விஜய் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராகவிருந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக வெளியிட முடியாமல் போனது. இதற்கு மேலும் முழுவதுமாக தயாரான படத்தை கையில் வைத்திருக்க முடியாது என்ற காரணத்தால் வெளியிட்டு திட்டத்தை மாற்றி உள்ளார்கள்.

டாக்டர் படத்தை நேரடியாக சன் தொலைக்காட்சியில் வெளியிட போவதாக தகவல் வெளியாகியுள்ளாது. அதன்படி இப்படம் வருகிற நவம்பர் மாதம் 4-ம் தேதி தீபாவளி பண்டிகை திருநாளில் சன் டி.வி-யில் நேரடியாக ஒளிப்பரப்பட்படவுள்ளதாக கூறப்படுகிறது. மிக விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

டாக்டர் படத்தை கே.ஜே.ஆர்.ஸ்டுயோஸ் நிறுவனமும் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.