Connect with us
 

Reviews

Sivakumarin Sabadham – Movie Review !

Published

on

Cast: HipHop Tamizha Aadhi
Production: Sathya Jyothi Films
Director: HipHop Tamizha
Music: HipHop Tamizha
Language: Tamil
Censor : ‘U’
Runtime: 2 Hour 19 Mins
Release Date: 30 Sep 2021

காஞ்சிபுரத்தில் வசித்து வரும் வரதராஜன் என்பவர் நெசவு தொழிலாளி. இவர் நெசவுத் தொழிலை தனது பரம்பரைத் தொழிலாக செய்துவருகிறார். பின் ஏதோ ஒரு காரணத்தினால் நெசவு பின் விடுகிறார் வரதராஜன். தனது தாத்தா வரதராஜன் போலவே நெசவு செய்யவில்லை என்றாலும் பட்டுப்புடவை விற்கும் தொழிலில் ஈடுபாட்டுடன் இருக்கிறார் கதாநாயகன் சிவகுமார் என்கிற ஹிப்ஹாப் ஆதி.

சிவகுமாரின் சித்தப்பாவாக வரும் முருகன் சிறுவயதிலிருந்தே தனக்கு அதிகமாக பாசம் கிடைக்காத காரணத்தினால் இளம் வயது வந்தவுடன் தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார். இது ஒரு பக்கம் இருக்க ஹீரோ வழக்கம் போல் தன் நண்பர்களுடன் ஊரை சுற்றி கொண்டு திரிகிறார்.

பின் திடீரென ஏற்படும் பிரச்சினையால் ஹீரோவும் அவருடைய நண்பரும், தாத்தா வரதராஜனும் போலீசாரால் கைது செய்யப்படுகிறார்கள். இவர்களை காப்பாற்ற மிகப்பெரிய தொழிலதிபர் சந்திரசேகரின் மருமகனாக மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கிறார் சித்தப்பா முருகன். இனி சிவகுமார் காஞ்சிபுரத்தில் இருந்தால் வாழ்க்கையில் உருப்பட மாட்டான் என நினைத்து சிவகுமாரை தன்னுடைய சித்தப்பாவுடன் அனுப்பி வைக்கிறார்கள்.

ஒரு பிரச்சனையில் முருகனை, சந்திரசேகர் வீட்டை விட்டு துரத்தி விடுகிறார். இவருடன் இருக்கும் வரதராஜனின் பேரன் சிவகுமார், சந்திரசேகருக்கு சபதம் போடுகிறார். இறுதியில் சிவகுமார் போட்ட சபதம் என்ன? அதை சிவகுமார் நிறைவேற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகனாக சிவகுமார் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஹிப்ஹாப் தமிழா ஆதி. வழக்கமாக குறும்பு தனம் செய்து ஜாலியாக இருக்கும் ஆதியை இப்படத்திலும் பார்க்க முடிகிறது. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம், தயாரிப்பு என அனைத்து பொறுப்புகளையும் ஏற்றுள்ளார். இத்தனை பொறுப்புகளை ஏற்று இருப்பதால், சரியாக எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலையில் இருந்திருக்கிறார்.

காஞ்சிபுரம் பட்டின் பெருமை, தறி செய்யும் தொழிலாளர்கள் என்று நல்ல கதையை எடுத்துக் கொண்ட ஆதி, அதைப்பற்றி முழுமையாக சொல்லத்தவறி விட்டார். முதல் பாதியின் திரைக்கதை எங்கு செல்கிறது என்று தெரியாமல் வழி தெரியாத குருடன் போல செல்கிறது. சரி இரண்டாம் பாதியில் கண்டிப்பாக இதற்கு எல்லாம் ஒரு விடை கிடைக்கும் என்று நினைத்த நமக்கு கிடைத்தது ஏமாற்றம் மட்டுமே.

படத்தில் எதற்காக தேவையில்லாமல் அத்தனை தத்துவங்கள் அதை வெட்டி எறிந்திருக்கலாம். படத்தின் முதல் பாதியிலேயே நான்கு பாடல்கள் வருவது சலிப்பு தட்டுகிறது. எந்த ஒரு பாடலும் மனதில் நிற்கவில்லை. இரண்டாம் பாதியில் பாடல்கள் ஓரளவு ரசிக்க முடிகிறது. அதே போல படத்தின் பின்னணி இசையும் ஓரளவு ரசிக்கும் ரகம்.

படத்தின் நாயகியாக வரும் மாதுரி தனக்கு கொடுத்த அந்த வேலையை சிறப்பாக செய்து கொடுத்துள்ளார். சித்தப்பா முருகன் என்ற வேடத்த்ல் வரும் பிராங்கஸ்டர் ராகுல். ஒரு சில இடத்தில் மட்டுமே சிரிக்க வைக்கிறார். பல இடங்களில் நம்ம கோபத்தின் உச்சத்திற்கு கொண்டு செல்கிறார். ஆதியின் நண்பர்களாக வரும் கதிர் ரசிக்கும் படியான நடிப்பை வெளிக்காட்டியுள்ளார்.

நகைச்சுவைக்கு அதிக முக்கியதுவம் கொடுத்து படத்தை இயக்கிய ஆதிக்கு அந்த நகைச்சுவை என்பது அவருக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. மிகவும் உச்ச காட்சி என்று நாம் பார்த்தால் படத்தில் மிகப்பெரிய நகைச்சுவை காட்சியாக அதுதான் இருக்கிறது. காமெடி காட்சிகள் நம்மை சீரியாக பார்க்க வைக்கிறது. நடனம் மற்றும் சண்டைக்காட்சிகளில் சற்று நம்மை கவர்ந்திருக்கிறார் ஆதி.

மொதத்தில் ‘வகுமாரின் சபதம்’ போட்ட சபதத்தில் தோற்று விட்டார்.

Rating:- [yasr_overall_rating]