News
எனக்கு திருமணமா எஸ்.ஜே.சூர்யா விளக்கம் !
SJ Surya 1999-ல் அஜித் குமார் நடிப்பில் வெளியான ‘வாலி’ படத்தின் மூலம் ஒரு இயக்குநராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான ‘குஷி’ திரைப்படத்தை இயக்கினார்.
இப்படத்தை தொடர்ந்து நியூ, அன்பே ஆருயிரே, இசை போன்ற படங்களை இயக்கி ஒரு நடிகராக அறிமுகமானார். தற்போது தவிக்க முடியாத முன்னணி நடிகராகவும் வில்லனாகவும் தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். குறிப்பாக மாநாடு படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கும் வசூலுக்கும் இவரும் ஒரு முக்கிய காரணம்.
54 வயதாகும் SJ Surya இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்த நிலையில் SJ Surya – வுக்கு அவரின் குடும்பத்தினர் பெண் பார்த்து வருவதாகவும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இது குறித்து எஸ்.ஜே. சூர்யாவிடம் விசாரித்த போது ‘ எனக்கு திருமணம் நடக்கவிருப்பதாக வெளியான தகவல் உண்மையல்ல. திருமணம் பற்றி நான் சிந்திக்கவில்லை அதற்கு எனக்கு நேரமும் இல்லை. இது போன்ற வதந்திகள் எங்கிருந்து எப்படி பரவுகிறது என்று எனக்கு தெரியவில்லை. தற்போது என் முழு கவனும் சினிமாவில் மட்டும்தான் இருக்கிறது’ என்று கூறினா.