News
கொலைகாரன் படத்தின் இயக்கத்தில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா !

இயக்குனர், பாடகர், இசையமைப்பாளர், நடிகர் என பன் முகங்களை கொண்டவர் எஸ்.ஜே.சூர்யா. தற்போது படம் இயக்குவதை கொஞ்ச காலம் தள்ளி வைத்து விட்டு படங்களில் நடிப்பதில் படு பிஸியாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் மெஹா ஹிட் கொடுத்த திரைப்படம் மான்ஸ்டர். தற்போது மொம்மை, மாநாடு போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இதில் பொம்மை படம் ஒரு காதல் கலந்த த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் ப்ரியா பவானி சங்கர் மற்றும் சாந்தினி இருவரும் நாயகிளாக நடித்திருக்கிறார்கள்.
இந்நிலையில் தற்போது முன்னணி நடிகர்கள் பலரும் வெப் சீரியஸ் பக்கம் அதிகமாக நடிக்க ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் எஸ்.ஜே.சூர்யாவும் வெப்சீரியஸ் பக்கம் களமிறங்குகிறார். முன்னணி ஓடிடி நிறுவனம் ஒன்று தயாரிக்கும் இந்த வெப்சீரியஸ் ஒன்றில் நடிக்கவுள்ளாராம் எஸ்.ஜே.சூர்யா.
விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கொலைகாரன் படத்தை இயக்கிய ஆண்ட்ரு லூயிஸ் இதை இயக்கவிருக்கிறார். சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் சீரிஸாக இது உருவாகவுள்ளதாம் இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கவுள்ளதாம்.