News
சிம்புவை தொடர்ந்து விஷாலுக்கு வில்லனாக மாறிய எஸ்.ஜே.சூர்யா !
சர்ச்சை இயக்குநர் என்று செல்லமாக அழைக்கப்படும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை விஷாலின் எனிமி படத்தை தயாரித்த மினி ஸ்டுடியோஸ் வினோத்குமார் தயாரிக்கவுள்ளார்.
இந்தநிலையில் இப்படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடிக்க எஸ்.ஜே.சூர்யாவை அனுகியுள்ளனர். மாநாடு படத்தின் மிகப்பெரிய பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் எஸ்.ஜே.சூர்யா தன்னுடைய சம்பளத்தை 6 கோடியாக உயர்த்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.
எஸ்.ஜே.சூர்யாவின் சம்பளத்தை கேட்டதும் இவ்வளவு தொகை கொடுத்து இவரை நடிக்க வைக்க வேண்டுமா என்ற குழப்பத்தில் படக்குழு இருந்ததாம்.
இந்த நிலையில்தான் இன்று புத்தாண்டு அன்று விஷாலுடன் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கண்டிப்பாக இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா அவர்களின் நடிப்பு பேசப்படும். மாநாடு படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு சிம்பு எந்த அளவு காரணமோ அதே அளவு இவரின் பங்களிப்பும் உண்டு என்பதை நாம் மறந்து விடக்கூடாது.