News
அஜித்தின் வாலி ஹிந்தி ரீமேக்கில் சிக்கல் எஸ்.ஜே.சூர்யா வழக்கு ?
எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜித் மற்றும் சிம்ரன் நடிப்பில் கடந்த 1999-ம் ஆண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் வாலி. இப்படத்தில் அஜித் குமார் கதாநாயகனாகவும் வில்லனாகவும் இரு வேடங்களில் நடித்திருந்தார். குறிப்பாக அஜித் குமாரின் சினிமா பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுணையாக வாலி படம் அமைந்தது.
இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்கான உரிமையை தயாரிப்பாளர் போனி கபூர் வாங்கியிருப்பதாகவும் ரீமேக் பணிகளை அடுத்த வருடம் தொடங்கவிருப்பதாகவும் கூறப்பட்டது. வாலி இந்தி ரீமேக்கை எதிர்த்து எஸ்.ஜே.சூர்யா ஏற்கனவே கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் அது தள்ளுபடியும் ஆனது.
வாலி இந்தி ரீமேக்கில் அஜித்குமார் நடிக்காத பட்சத்தில் தானே நடிக்க எஸ்.ஜே.சூர்யா விரும்புவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் படத்தின் டப்பிங் உரிமை தயாரிப்பாளருக்கு இருந்தாலும் ரீமேக் உரிமை திரைக்கதை எழுதியவருக்கே உண்டு என்ற சமீபத்திய ஆரண்ய காண்டம் பட வழக்கில் வெளியான கோர்ட்டு தீர்ப்பை சாதகமாக எடுத்துக்கொண்டு திரைக்கதை தன்னுடையது என்பதால் வாலி இந்தி ரீமேக்கை எதிர்த்து எஸ்.ஜே.
சூர்யா சுப்ரீம் கோட்டில் மேல் முறையீடு செய்யருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வாலி படத்தை இந்தியில் ரீமேக் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.