Connect with us
 

News

கங்குவா படத்தை திட்டமிட்டு அவதூறு விமர்சனம் செய்கிறார்கள் – ஜோதிகா !

Published

on

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த வியாழன் அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் கங்குவா. வெளியான நாள் முதல் இப்படம் முற்றிலும் நெகட்டிவ் விமர்சனங்களை மட்டுமே பெற்று வருகிறது.

முதல் நாளுக்கு பின்னர் கிடைத்த இந்த படு மோசமான விமர்சனத்தில் எதிரொலி அடுத்த நாட்களில் திரையரங்குகளில் கூட்டமே இல்லை. இதுவரை வந்த சூர்யாவின் படங்களில் மோசமான தோல்வி படம் இதுதான் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகா இது பற்றி பதிவிட்டுள்ள பதிவில் ‘ கங்குவா படம் திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார்கள். மற்ற பெரிய படங்களுக்கு வராத விமர்சனங்கள் கங்குவா படத்திற்கு மட்டும் ஏன் வருகிறது என ஜோதிகா கேள்வி எழுப்பியுள்ளார். படத்தின் முதல் 30 நிமிடங்கள் மட்டும் நன்றாக வரவில்லை. குறிப்பாக சத்தம் இரைச்சலாக உள்ளது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.

பெண்களை கேலி செய்யும் இரட்டை அர்த்த வசனம் கொண்ட படங்களுக்கு கூட எதிர்மறை விமர்சனங்கள் வருவதில்லை. ஊடகங்கள் மாற்று சிலரின் எதிர்மறையான விமர்சனங்கள் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நான் முன்பு பார்த்த மிகப்பெரிய அறிவுக்கு மாறான பெரிய பட்ஜெட் படங்களின் பெண்களை பின்தொடர்வது மற்றும் இரட்டை அர்த்த வசனங்கள் பேசுவது போன்றவற்றுக்கு எல்லாம் ஏன் இந்த அளவுக்கு யாரும் விமர்சனம் செய்யவில்லை என்று காட்டமாக பதிவிட்டுள்ளார் ஜோதிகா.