News
விரைவில் அஜித் அவர்களுடன் இணைந்து நடிப்பேன் – விஜய் சேதுபதி !

நடிகர் விஜய் சேதுபதி தற்போது இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரி விழாவில் கலந்து கொண்டார். அங்கு அவரிடம் விஜய்யுடன் இணைந்து நடித்து விட்டீர்கள் அஜித்துடன் எப்போது இணைந்து நடிப்பீர்கள் என்று பத்திரிக்கையாளர் ஒருவர் கேள்வி கேட்டார்.
இதற்கு பதில் கூறிய விஜயசேபதி “ பலர் என்னிடம் இந்த கேள்வியை கேட்கிறார்கள். நானும் அஜித்தும் ஒரு படம் இணைந்து நடிப்பதாக இருந்தது ஒரு சில காரணத்தால் அது நடைபெறாமல் போய்விட்டது. அஜித் அவர்கள் ஒரு சிறந்த நடிகர். நாம் திட்டமிட்டு எதுவும் இங்கு நடப்பதில்லை. ஆனால் கண்டிப்பாக நானும் அஜித் அவர்களும் இணைந்து நல்ல ஒரு படத்தில் நடிப்பேன் அது மிகவும் விரைவில் நடக்கும் எனவும் நினைக்கிறேன் என கூறினார்.