Reviews
கருடன் – விமர்சனம் !
Cast: Soori, Sasikumar, Unni Mukundan, Revathy Sharma, SShivada, Roshini Haripriyan, Brigida, Samuthirakani
Production: Lark Studios
Director: R.S.Durai Senthilkumar
Screenplay: R.S.Durai Senthilkumar
Cinematography: Arthur A Wilson
Editing: Pradeep E Ragav
Music: Yuvan Shankar Raja
Language: Tamil
Runtime: 2 Hours 14 Mins
Release Date: 31 May 2024
இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் கருடன்.
தேனி அருகே உள்ள கோம்பை என்ற கிராமத்தில் கோவிலுக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள இடம் ஒன்று சென்னையில் உள்ளது. ஆனால் இது அந்த ஊர் மக்கள் யாருக்கும் தெரியாது. அதை எப்படியாவது தனதாக்கிக்கொள்ள நினைக்கிறார் பத்திரப்பதிவு துறை அமைச்சர் ஆர்வி உதயகுமார். அதற்கு கோவில் லாக்கரில் உள்ள பட்டயத்தை எடுக்க முயற்சி எடுக்கிறார் அமைச்சர் ஆனால் அந்த கோவிலின் டிரஸ்ட்டிகளாக இருப்பவர்கள் நெருங்கிய நண்பர்களான சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் இவர்கள் இருவரையும் மீறி எடுப்பது மிகவும் கடினமாக உள்ளதால் இவர்கள் இருவருக்கும் இடையில் பிரச்சனை வரவைத்து அதனால் சில மோதல்கள் இழப்புகள் உருவாகிறது. இதற்கு இடையில் உன்னி முகுந்தனின் பரமா விஸ்வாசியான சூரி எப்படி கையாண்டு முடித்து வைக்கிறார் என்பது படத்தின் மீதிக்கதை.
விடுதலை படத்திற்கு பின்னர் நாயகனாக நடித்திருக்கும் சூரி உன்னி முகுந்தன் வீட்டில் வளர்க்கிறார். சிறு வயதில் சூரி அனாதையாக இருக்கும் போது உன்னி முகுந்தன் எடுத்து தன் வீட்டில் வைத்து வளர்க்கிறார். உன்னி முகுந்தனிடம் சூரியால் எந்த ஒரு உண்மையையும் மறைக்க தெரியாது. அப்படி சில காட்சிகளில் உண்மைகளை வேகமாக உளறிக்கொட்டி பேசும் இடங்களில் கைத்தட்டல்கள் வாங்குகிறார். படத்தில் வரும் அனைத்து அதிரடி காட்சிகளிலும் நாம் பார்த்த காமெடி நடிகர் சூரியா இது என நம்மை ஆச்சரிப்பட வைக்கிறார். அதுவும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இவர் பேசும் ஒரு வார்த்தை ‘ நாயாக இருந்த என்னை மனுஷனா ஆக்கிடங்களே; என பேசும் ஒரு வசனத்தில் சூரி எந்த அளவுக்கு ஒரு சிறந்த நடிகன் என்பதை நமக்கு தெரிகிறது.
கிராமத்து உயிர் நண்பன் என்றால் நமக்கு நினைவில் வருவது சசிகுமார். இவரை விட இந்த மாதிரியான கதாப்பாத்திரத்தை இயழ்பாக நடிக்க யாருமே இல்லை இந்த தமிழ் சினிமாவில். ஆதி என்ற கதாபாத்திரத்தில் தன் வழக்கமான நடிப்பில் அசத்தியுள்ளார்.
ஜமீன் குடும்பத்தை சேர்ந்த வாழ்ந்து கெட்ட குடும்பத்தை சேர்ந்தவர் உன்னி முகுந்தன். செங்கல் சூளை நடத்திக் கொண்டு வசதியான வாழ்க்கைக்குத் தவிக்கும் ஒரு மனம் கொண்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். அமைச்சர் வந்து சில கோடி பங்கு தருகிறேன் என்று சொன்னதும் அப்படியே மனம் மாறுகிறார். நண்பனாக இருந்தாலும் நம்பாதே என சொல்ல வைக்கிறது இவர் கதாப்பாத்திரம்.
சூரியின் காதலியாக ரேவதி ஷர்மா கிராமத்து பெண்ணாக வந்து நம் மனதை கவர்கிறார். சசிகுமார் மனைவியாக வரும் ஷிவதா சூரியை மண் அள்ளி தூவி திட்டும் காட்சிகளில் ஒட்டுமொத்த அப்லாஸ் இவருக்கு கிடைக்கிறது இந்த ஒரு காட்சியே இவருக்கு இந்த படத்தில் போதுமானது. உன்னி முகுந்தன் மனைவியாக வரும் ரோஷினி ஹரிப்ரியன் கணவரை ஏத்தி விட்டு பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போடும் ஒரு கதாப்பாத்திரம்.
இன்ஸ்பெக்டர் சமுத்திரக்கனி, அமைச்சர் ஆர்வி உதயகுமார், மைம் கோபி, வடிவுக்கரசி, துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், பிரிகிடா என அனைவரும் படத்தின் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தில் சூரியின் அனைத்து சண்டைக்காட்சிகளுக்கும் தன் இசையால் மிரட்ட வைத்துள்ளார் யுவன் சங்கர் ராஜா. குறிப்பாக இடைவேளை காட்சியில் வரும் இசையும் சரி கிளைமாக்ஸ் காட்சியும் சரி சும்மா மிரட்டியுள்ளார்.
மொத்தத்தில் ‘கருடன்’ நம்பிக்கை உள்ள ஒரு காவலன்.
Rating :3.5/5