Connect with us
 

Reviews

கொட்டுக்காளி – விமர்சனம் !

Published

on

Cast: Soori, Anna Ben
Production: SK Production
Director: PS Vinothraj
Screenplay: PS Vinothraj
Cinematography: B. Sakthivel
Editing: Ganesh Siva
Music:
Language: Tamil
Runtime: 1H 44Mins
Release Date: 23 August 2024

கருடன் படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் கொட்டுக்காளி. நடிகர் சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

கிராமத்தில் வசித்து வரும் சூரிக்கு அவரின் முறை பெண்ணான அன்னா பென்னுடன் திருமணம் முடிவாகிறது. ஆனால் கல்லூரியில் படிக்கும்போது வேறு ஒரு நபருடன் காதல் வயப்படுகிறார். இதனால் சூரியை திருமணம் செய்ய மறுப்பு தெரிவிக்கிறார். இதற்காக பேய் பிடித்தவர் போல நடிக்கிறார்.

இவருக்கு பேய்தான் பிடித்திருக்கிறது என்று குடும்பத்தினர் இவரை பூசாரியிடம் அழைத்து செல்கிறார்கள். அப்படி செல்லும் வழியில் இவர்கள் சந்திக்கும் சிக்கல்கள்தான் படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகனாக நடித்துள்ள சூரி கரகரப்பான பேச்சு, தான் காதலிக்கும் முறைப்பெண் தன்னை காதலிக்க தயங்குவது அதனால் ஏற்படும் மனவலி, இதற்கு எல்லாம் காரணமான குடும்பத்தை வார்த்தைகளால் வதைப்பது என அபாரமான நடிப்பால் அசத்தியுள்ளார்.

நாயகியாக வரும் அன்னா பென் பேசாமல் படம் முழுவதும் உடல் மொழிகளால் அவ்வளவு நேர்த்தியாக நடித்துள்ளார். இவர் வசனம் பேசி நடித்திருந்தால் கூட இந்த அளவுக்கு நடித்திருப்பாரா என்பது சந்தேகம். தன் விழிகளால் மன வலியை வெளிக்காட்டுவது சோகம், சந்தோஷம் என அனைத்தையும் கண்கள் கூட வெளிப்படுத்தியுள்ளார்.

சூரியின் அக்காவாக வருபர்கள், அன்னா பென்னியின் அப்பா, அம்மா, சிறுவன் காளையை கொஞ்சும் சிறுமி, சேவல் என கதையில் வரும் அனைத்து கதாப்பாத்திரங்களும் சிறப்பான தேர்வு.

படத்தில் இசை என்று ஒன்று இல்லை. ஆனாலும் அது ஒரு குறையாக தெரியவில்லை. மலைகள், வெட்டாந்தரை, பொட்டல் காடு, நிசப்தம் நிலவும் கிராமங்கள் இருக்கும் தெருக்கள், அழகான ஒத்தையடி பாதை, சேவல் என அனைத்தையும் மிக சிறப்பாக காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் சக்திவேல்.

விறுவிறுப்பாக செல்லும் படத்தின் முடிவை ரசிகர்கள் கையில் விட்டுவிடுவது சிறப்பு. படத்தின் மிகப்பெரிய பலவீனம் என்றால் படம் முழுவதும் பயணத்திலேயே செல்வது.

Rating 2.5/5