News

பூஜையுடன் ஆரம்பமானது அஜித் குமாரின் 61-வது படம் !

Published

on

வலிமை படத்திற்கு பின்னர் மூன்றாவது முறையாக இயக்குநர் எச்.வினோத் அஜித்குமார் இணையும் அடுத்த படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. இது அஜித் குமாரின் 61-வது படமாகும்.

நேர்கொண்டபார்வை, வலிமை படத்திற்கு பின்னர் எச்.வினோத், அஜித் குமார், போனி கபூர் மூவரும் இணையும் மூன்றாவது படம். தற்போதைக்கு அஜித் 61 என பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தை பேவியூ பிராஜெக்ட்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது.

இப்படத்தின் பூஜை புகைப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து படப்பிடிப்பும் தொடங்கியது என்று அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

Trending

Exit mobile version