News

அண்ணாத்த படப்பிடிப்பை நடத்த வட மாநிலத்தில் கடும் எதிர்ப்பு !

Published

on

ரஜினிகாந்த் நடித்துவரும் அண்ணாத்த படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தனது அனைத்து காட்சிளை நடித்து முடித்து விட்டார் ரஜினிகாந்த். தற்போது மற்ற நடிகர்கள் காட்சிகள் வட மாநிலங்களில் படமாக்கப்பட்டு வருகிறது.

உத்தர் பிரதேச தலைநகர் லக்னோவில் ஷியா முஸ்ஸிம்களின் புனித தலமான வரலாற்று சிறப்பு மிக்க இமாம்பாடாவில் கடந்த சில நாட்களாக படப்பிடிப்பை நடத்தி வந்தனர். இது குறித்த தகவல் அறிந்த பொதுமக்கள் ரஜினிகாந்த் வருவார் என்ற எதிர்பார்ப்பிலும் அவரை கானும் ஆர்வத்திலும் அங்கு கூடினார்கள்.

அதிகமாக கூட்டம் கூடியதால் படப்பிடிப்பில் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகள் மீறப்படுவதாகவும் எதிர்ப்பு கிளம்பியது. சிலர் படக்குழுவினரை முற்றுகயிட்டு படப்பிடிப்பை நிறுத்தும்படி கோஷம் எழுப்பினர் இதையடுத்து படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது.

எதிர்ப்பாளர்கள் கூறும்போது கொரோனா பரவல் காலத்தில் படப்பிடிப்பில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. படப்பிடிப்புக்கு எப்படி அனுமதி அளித்தார்கள் என்றும் புரியவில்லை என்றனர். எதிர்ப்பு காரணமாக படப்பிடிப்பை வேறி இடத்துக்கு மாற்றலாம் என்று படக்குழுவினர் யோசித்து வருகின்றனர்.

Trending

Exit mobile version