Connect with us
 

News

இது போன்ற கனிவான வார்த்தைகள்தான் வெற்றிக்கு காரணம் – சூர்யா !

Published

on

சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடித்து ஓ.டி.டி தளத்தில் வெளியான திரைப்படம் சூரரை போற்று. இப்படத்துக்கு விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பு கிடைத்தது. திரைப்பட விழாக்களில் பல விருதுகளையும் வென்றது. உலகின் தலை சிறந்த ஆஸ்கார் விருது போட்டிக்கும் அனுப்பி வைக்கப்பட்டது இப்படம்.

மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்தது. இந்த நிலையில் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் சூரரை போற்று படத்தை பார்த்து விட்டு அதில் இடம்பெற்ற கையிலே ஆகாசம் பாடலை கேட்டு கண்ணீர் சிந்தியதாக சமூக வலைத்தளத்தில் பாராட்டி பதிவிட்டார்.

அமிதாப்பச்சன் பாராட்டை கேட்டு சூர்யா நெகிழ்ந்துபோய்யுள்ளாராம். அவருக்கு நன்றி தெரிவித்து சூர்யா டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்:-

இதிமாதிரியான தருணங்களும் இதுபோன்ற கனிவான வார்த்தைகள் கொண்ட பாராட்டுகளும்தான் சூரரை போற்று படத்துக்கான பெரிய வெகுமதிகள். அமிதாப்பச்சன் பாராட்டில் நெகிழ்ந்து போய் விட்டேன் என்று பதிவிட்டுள்ளார்.