News

சுனைனா நடிக்கும் ஸ்டைலிஷ் திரில்லர் படம் ரெஜினா !

Published

on

தென்னிந்திய திரையுலகின் திறமை மிக்க பிரபல நடிகை இருப்பவர் சுனைனா. நீர்ப்பறவை, சில்லுக்கருப்பட்டி படங்களில் தன் நடிப்பு திறமையால் அனைவரையும் கவர்ந்தவர், தற்போது பன்மொழிகளில் உருவாகும் #ரெஜினா என்ற புதிய திரைப்படத்தில் முதன்மை நாயகியாக நடிக்கிறார். ( Yellow Bear Production LLP ) எல்லோ பியர் புரொடக்‌ஷன் சதீஷ் நாயர் இப்படத்தினை தயாரிக்கிறார்.

இப்படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார், மலையாள பிரபலம் டோமின் டி சில்வா.இவர், மலையாளத்தில் பரபரப்பாக பேசப்பட்ட “பைப்பின் சுவத்திலே பிராணயம்” மற்றும் “ஸ்டார்” படங்களை இயக்குகியவர். இப்படம் பெண்களை மையமாகக் கொண்ட ‘ஸ்டைலிஷ் திரில்லராக’ இருக்கும் என்று இயக்குநர் டோமின் டி சில்வா கூறியுள்ளார். மேலும் நீரோட்டத்திற்கு எதிராக ஒரு மீன் நீச்சலடிப்பதை போல, இப்படம் ஒரு சாதாரண இல்லத்தரசி ஆக இருக்கும் ஒரு பெண், அசாதாரணமான விஷயங்களைச் சாதிப்பதைப் பற்றியதாகவும், அனைவரயும் ஈர்க்கக்கூடிய ஒரு திரில்லர் படமாக இருக்கும், ”என்றார்.

Trending

Exit mobile version