News

மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கும் சுந்தர் சி !

Published

on

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த 2020ம் ஆண்டு வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கவுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில். நடிகை த்ரிஷாவை வைத்து மாசாணி அம்மன் என்ற ஒரு படத்தை இயக்கவுள்ளதாகவும் அப்படம்தான் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் என்றும் சொல்லப்பட்டு வந்த நிலையில் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது அதில் நாயகியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். இப்படத்தின் இயக்குநர் யார் என்று விரைவில் அறிவிக்கப்படும் என அறிவித்தது.

இந்த நிலையில் தற்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தை வெற்றி பட இயக்குநர் சுந்தர்.சி இயக்கவுள்ளார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும்.

 

Trending

Exit mobile version