News

நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன்-2வை இயக்கும் சுந்தர் சி !

Published

on

நயன்தாரா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற திரைப்படம் மூக்குத்தி அம்மன். சமீபத்தில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பை வெளியிட்டது வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம். மிக விரைவில் இப்படத்தின் இயக்குநர் யார் என்பதை அறிவிப்போம் என அறிவித்திருந்தது தயாரிப்பு நிறுவனம்.

இந்த நிலையில் இப்படத்தின் இயக்குநர் சுந்தர்.சி என படக்குழு அறிவித்துள்ளது. சமீபத்தில் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் ரூ.100 கோடி வசூலை பெற்ற நிலையில் மூக்குத்தி அம்மன் 2 படமும் ரூ.100 கோடி வசூல் செய்யும் என நம்பப்படுகிறது.

நயன்தாரா சினிமா பயணத்தில் இப்படம்தான் அதிக பட்ஜெட்டில் உருவாகவுள்ள திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Trending

Exit mobile version