News

சன்னி லியோன் நடிக்கும் ஹாரர் காமெடி திரைப்படம் ஓ மை கோஸ்ட் !

Published

on

தமிழில் நடிகை சன்னி லியோன் நடிப்பில் வரலாற்று பின்னணியில் உருவாகும் ஹாரர் காமெடி திரைப்படம் ஓ மை கோஸ்ட (OMG) அறிவிக்கப்பட்டதிலிருந்தே படத்தின் மீது, பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

மிக சமீபத்தில் தான் இப்படத்தின் முதல் கட்டபடப்பிடிப்பு நிறைவு பெற்றது. அதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் நடிகை சன்னி லியோன் இணைந்ததில், படக்குழு மிகப்பெரும் உற்சாகத்தில் இருந்தது.இந்நிலையில் மிகக்குறுகிய காலத்தில் படக்குழுவினரின் அயராத உழைப்பில், இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு மும்பையில் இனிதே நிறைவு பெற்றுள்ளது. கோவிட் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும், முறையாக கடைப்பிடிக்கப்பட்டு நடத்தப்பட்ட இப்படப்பிடிப்பில் சன்னி லியோன் நடித்த முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டன.

OMG என்பது ஓ மை கோஸ்ட் என்பதன் சுருக்கமே, இப்படம் முழுக்க, முழுக்க ஒரு கமர்ஷியல், பொழுதுபோக்கு சித்திரமாக இருக்கும். இப்படம் வரலாற்று பின்னணி கதைகளத்தை கொண்டது. முதல் முறையாக வரலாற்று பின்னணியில் ஹாரர் காமெடியை செய்துள்ளோம்.சன்னி லியோன் பாத்திரம் படத்தின் மிக முக்கியமான முதன்மை பாத்திரமாக, ரசிகர்களை கவரக்கூடியதாக இருக்கும்.

ஓ மை கோஸ்ட் (OMG) திரைப்படத்தினை VAU MEDIA ENTERTAINMENT சார்பில் தயாரிப்பாளர் D.வீரா சக்தி மற்றும் WHITE HORSE STUDIOS சார்பில் K. சசிகுமார் இணைந்து தயாரிக்கின்றனர்.

Trending

Exit mobile version