Connect with us
 

News

அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய ரஜினி !

Published

on

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் அண்ணாத்த. நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா சூரி, சதீஷ், ஜெகபதி பாபு என பலர் நடிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். சன் பிசர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட் செலவில் இப்படத்தை தயாரிக்கிறது.

அனைத்து படப்பிடிப்பிடிப்புகளும் முடிந்து விட்டது என்று தெரிவித்த நிலையில் சில காட்சிகள் விடுபட்டுவிட்டன அந்த காட்சிகளை ஐதராபாத்தில் சென்று படமாக்கவிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அங்கு செல்வது தள்ளி போனதால் சென்னை செட் போட்டு அந்த காட்சிகளை படமாக்கினர்.

இந்த நிலையில் மறுபடியும் அங்கு சென்று படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாம் படக்குழு. தற்போது ரஜினி அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகளை ஆரம்பித்து விட்டாராம். ரஜினி நடிக்க வேண்டிய அனைத்து காட்சிகளையும் நடித்து முடித்து விட்டாராம். தற்போது மயிலாப்பூரில் உள்ள ஒரு தனியார் ஸ்டுயோவில் ரஜினி தனது டப்பிங் பணிகளை செய்து வருகிறார்.

மேலும் அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அடுத்த மாதம் வெளியாகவிருப்பதாக கூறப்படுகிறது. இத்திரைப்படம் இந்தாண்டு தீபாவணி திருநாளை முன்னிட்டு நவம்பர் மாதம் 4 தேதி வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.