Connect with us
 

English

என்னை அறிந்தால் தெலுங்கு ரீமேக்கில் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி !

Published

on

மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் லூசிபர். இப்படத்தை தெலுங்கில் சிரஞ்சீவி ஆச்சர்யா என்ற பெயரில் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு பின்னர் அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளாராம். அந்த படத்திற்கான இயக்குனர் தேர்வு செய்து தற்போது கதை விவாதங்கள் நடந்து வருகின்றதாம்.

இந்நிலையில் கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித், திரிஷா மற்றும் அருண் விஜய் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நடிக்கவுள்ளாரம். இப்படத்தை பார்த்த சிரஞ்சீவி படத்தின் கதை பிடித்து போக தனக்கு ஏற்றபடி கதையை அமைத்து தருமாறு சாஹோ இயக்குனர் சுஜித்திடம் கூறியிருக்கிறாராம்.

இதற்கு முன்னர் விஜய் நடிப்பில் வெளியான கத்தி திரைப்படத்தை தெலுங்கில் கைதி நம்பர் 150 ரீமேக் செய்து நடித்து மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.