News
அண்ணாத்த திரைப்படம் 200 கோடி வசூல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது !

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ் ராஜ், ஜகபதி பாபு, சூரி, சதீஷ் பல முன்னணி நடிகர்க நடிகைகள் நடிப்பில் தீபாவளி பண்டியை திருநாளில் வெளியான திரைப்படம் அண்ணாத்த. படம் வெளியாகி அதிகமான நெகட்டிவ் விமர்சனங்களை மட்டுமே பெற்றது. ஆனாலும் இப்படம் வசூலில் சாதனை படைத்துள்ளது.
அண்ணாத்த திரைப்படம் உலகமெங்கும் 1000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. முதல் 3 நாட்களிலே 100 கோடி ரூபாய் வசூல் செய்தாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
தற்போது வெளிவந்த தகவலின் படி 7 நாட்களில் 200 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப்பெரிய ஒரு சாதனையை செய்துள்ளதாக தகவல் பரவி வருகிறது.
படம் படு மொக்கை என்று பலர் கூறி வரும் நிலையில் ஒரு பக்கம் இந்த அளவு வசூல் சாதனை செய்து வருகிறது என்று ரஜினிகாந்த் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.