Trailer
ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் டிரைலர் வெளியானது !

இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் டிரைலர் வெளியாகியுள்ளது.
ஜெய்பீம் என்ற படத்தின் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் ஞானவேல். தற்போது ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தை இயக்கியுள்ளார். மன்னிக்க முடியாத குற்றவாளிகளை என்கவுண்டர் செய்து கொலை செய்வது போலீஸ் வழக்கம். அப்படிப்பட்ட என்கவுண்டரை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது.
அக்டோபர் 10-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரங்கள் பாடு தீவிரமாக செய்து வருகிறது இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ்.
இந்த நிலையில் சற்று முன்னர் வேட்டையன் படத்தின் டிரைலரை வெளியிட்டது படக்குழு. ரஜினிகாந்த் பேசும் மாஸ் பன்ச் வசனங்கள் அதிரடி சண்டைக்காட்சிகள் என அனல் பறக்கும் டிரைலரை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.