Connect with us
 

News

சூரி நடிக்கும் கருடன் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு !

Published

on

சூரி கதாநாயகனாக நடித்து வெளிவந்த விடுதலை மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து சூரி நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் கருடன்.

இப்படத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் வில்லனானவும் சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தை பிரபல இயக்குநர் வெற்றிமாறன் கதை எழுத துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் மே 31ம் தேதி வெளியாகும் என படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.