News
சூர்யாவின் 24 பட இடண்டாம் பாகம் உருவாகிறது !

Suriya நடிப்பில் இயக்குநர் விக்ரம் குமார் இயக்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு திரைக்கு வந்த திரைப்படம் ’24’ இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகவுள்ளதாக அப்படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் Suriya 3 வேடங்களில் நடித்திருந்தார். சூர்யாவின் சொந்த நிறுவனமான 2டி எண்டர்டெயின்மென்ட் இப்படத்தை தயாரித்திருந்தது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது இப்படம்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவர் டைம் டிராவல் முறையில் உருவான இப்படத்திற்கு ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரின் பாராட்டை பெற்றது.
குறிப்பாக இப்படத்தில் ஆத்ரேயா என்ற வில்லன் வேடத்தில் வரும் சூர்யா இப்படத்தில் மிரட்டியிருப்பார். இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகருப்பதாக இயக்குநர் விக்ரம் குமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.