News
10 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் சூர்யா 42 !

இயக்குநர் சிவா இயக்கத்தில் Suriya நடிக்கும் 42-வது படத்தின் பூஜை இன்று காலை சென்னையில் நடைபெற்றது.
இப்படத்தின் பூஜையில் Suriya, சிறுத்தை சிவா, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர். பூஜை நடந்ததாக கூறினாலும் அதிகாரபூர்வமாக எந்தவொரு அறிவிப்போ இல்லை பூஜையின் புகைப்படமோ இன்னும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இதுகுறித்து பேட்டி ஒன்றில் கூறியதாவது. Suriya 42-வது படத்தின் மோஷன் போஸ்டர் அடுத்த வாரம் வெளியாகும். மேலும் இது ஒரு பான் இந்தியா திரைப்படமாக வெளியாகும் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஒரியா, மராத்தி இந்தி என மொத்தமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.