News

வெளியானது சூர்யா 42 படத்தின் தலைப்பு !

Published

on

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42-வது படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார். வித்தியாசமான 5 வேடங்களில் சூர்யா இப்படத்தில் நடித்து வருகிறார். சுமார் 10க்கும் மேற்பட்ட மொழிகள் இப்படம் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இசையமைப்பாளத் தேவி ஶ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தின் டைட்டில் இன்று காலை வெளியானது. அதன் படி சூர்யா 42 இன்று முதல் கங்குவா என அறிவிக்கப்பட்டுள்ளது. 3டி தொழில் நுட்பத்தில் உருவாகும் இப்படத்தின் டைட்டில் வீடியீவாக வெளியானது.

சூர்யா 42 படத்தின் தலைப்பை கங்குவா என அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம் கண்டிப்பாக திரையில் நெருப்பின் வீரமும் வலிமையும் கொண்ட ஒரு நாயகனாக சூர்யா இருப்பார். அதே சமயம் தனித்துவமான சுவாரஸ்யம் தரக்கூடிய ஒரு கதையாக இரு இருக்கும். படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு விரைவில் பட வெளியீட்டு தேதியையும் அறிவிப்போம் என்று அதில் பதிவிட்டிருந்தார்.

Trending

Exit mobile version