News

ஞானவேல் ராஜ கொடுத்த கடும் எச்சரிக்கை ஏன் என்ன காரணம்?

Published

on

இயக்குநர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 42-வது படத்தின் படப்பிடிப்பு தள வீடியோக்கள் இணையத்தில் அதிக நபர்களால் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை உடனடியாக நீக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இப்படம் நூற்றுக்கணக்கான கலைஞர்களின் ரத்தம் மற்றும் வியர்வையை சிந்தி எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தை திரையரங்குகளில் மிக பிரமாண்டமாக ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என திட்டத்துடன் உருவாகி வருகிறது. அதை சீர் குலைக்கும் நோக்கத்துடன் இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிரப்பட்டு வந்தால் அந்த நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.

Trending

Exit mobile version