News
சூர்யா – பாலா மோதலா தயாரிப்பு நிறுவனம் விளக்கம் !

இயக்குநர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வருகிறார். இந்த நிலையில் பாலாவுடன் சூர்யாவுக்கு ஏற்பட்ட கருத்துமோதல் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பிலிருந்து சூர்யா வெளியேறியதாகவும் தகவல் வெளியானது.
இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து 2டி நிறுவனம் இன்று ஒரு பதிவை வெளியிட்டது அதில் இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாமுகரியில் 34 நாட்களுக்கு முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு படக்குழு தயாராகவுள்ளது.
இப்படத்தின் செட் தயாரிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்த பின்னர் ஜூன் மாதம் கோவாவில் 15 நாட்களுக்கு படப்பிடிப்பு நடைபெறவுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.