News

கதை திருட்டு விவகாரம் தெரிந்ததும் சூர்யா செய்த காரியம் !

Published

on

சூர்யா தயாரிப்பில் கடந்த மாதம் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும். மிதுன், ரம்யா பாண்டியன் நடிப்பில் வெளியான திரைப்படத்தை அரிசில் மூர்த்தி இயக்கிவிருந்தார்.

இப்படம் மாராத்தியில் 2016-ம் ஆண்டு வெளியான ரங்கா படாங்கா படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டது என்று படம் வெளியான போது விமர்சகர்கள் கூறிய பின்னரே சூர்யாவுக்கு இந்த விஷயம் கவனத்திற்கு வந்துள்ளது. இதை கேட்ட சூர்யா கடும் போபத்துக்கு ஆளானார். இயக்குநர் அரிசில் மூர்த்தியை அழைத்து கண்டித்தும் உள்ளார்.

அது மட்டுமில்லாமல் ரங்கா படாங்கா படத்தின் தயாரிப்பாளருக்கு காப்பி ரைட்டுக்காக பெரும் தொகை ஒன்றையும் கொடுத்துள்ளார் சூர்யா.ஒரு கதை வேறொரு படத்திலிருந்து எடுக்கப்பட்டது என்று தெரிந்ததும் தானாக முன் வந்து அப்படத்தின் தயாரிப்பாளருக்கு நஷ்ட ஈடு கொடுப்பது தமிழ் சினிமாவில் இதுவே முதல் முறையாம்.

Trending

Exit mobile version