News
ஒரே நேரத்தில் இரட்டிப்பு அப்டேட் கொண்டாட்டத்தில் சூர்யா ரசிகர்கள் !

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூர்யாவின் 40-வது படம். இப்படத்தில் சூர்யாவுடன் நடிகை ப்ரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் உள்பட பலர் நடித்து வருகிறார்கள். டி.இமான் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி பின்னர் காரன்க்குடி அதனை தொடர்ந்து மதுரையிலும் நடந்தது.
கொரோனா இரண்டாவது அலை காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் இந்த மாதம் 13-ம் தேதி மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது.
படப்பிடிப்பு தொடங்கப்பட்டத் அப்படத்தின் ஒளிப்பதிவாளம் ரத்னவேலு தெரிவித்தார். மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் கேமராவை பிடிப்பது சிறந்த உணர்வாக இருக்கிறது என்று தெரிவித்தார்.
இது ஒரு பக்கம் இருக்க ஒரே நாளில் இரட்டிப்பு மகிழ்ச்சியாக சூர்யா ரசிகர்களுக்கு வாடிவாசல் படத்தின் அப்டேட் கிடைத்தது. அதில் வாடிவாசல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 5:30 வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.