News
ஆஸ்கர் குழுவில் செல்லும் முதல் தென்னிந்திய நடிகர் சூர்யா !

உலகின் ஆகச்சிறந்த விருது என்றால் அது ஆஸ்கர் விருதான். ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராக சேர பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல கலைஞர்களை அழைப்பார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு கலை மற்றும் அறிவியல் பிரிவில் இந்தியா சார்ப்பாக நடிகர் Suriya -வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பின் மூலம் தென்னிந்திய சினிமாவிலிருந்து ஆஸ்கர் குழு உறுப்பினராக செல்லும் முதல் நடிகர் என்ற பெருமை சூர்யாவுக்கு கிடைத்துள்ளது. சூர்யாவுடன் ஹிந்தி நடிகையான கஜோலுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாம் ஆஸ்கர் குழு.