News

12த் ஃபெயில் தமிழ் ரீமேக் உரிமத்தை வாங்கிய சூர்யா !

Published

on

இயக்குநர் விது வினோத் சோப்ரா இயக்கத்தில் விக்ராந்த் மாஸே நடிப்பில் உருவான திரைப்படம் 12த் பெயில். இந்த படம் 12 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிப்பட்ட இப்படம் ரூ.50 கோடி வசூலை நெருங்கி வருகிறது. இந்த நிலையில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற இந்த படத்தின் தமிழ் உரிமையை சூர்யா வங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மிகவும் ஏழ்மையான நிலையில் இருக்கும் ஒருவர் ம.கி.கிராமத்திலிருந்து வந்து ஜ.பி.எஸ்.அதிகாரியாக மாறியது எப்படி என்ற கதை அம்சம் கொண்ட இந்த படத்தின் உரிமையை சூர்யா வாங்கி இருப்பதை அடுத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மனோஜ் குமார் சர்மா ஐ.பி.எஸ்.அதிகாரியின் நிஜ வாழ்க்கை கதை இது.சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்து வாடிவாசல் அதனை தொடர்ந்து சுதா கொங்காரா படம் என பிசியாக நடித்து வருகிறார். இதனால் இப்படத்தை சூர்யா தயாரிக்க வேறு ஹீரோ நடிக்கலாம் என கூறப்படுகிறது. இப்படம் இளம் ஹீரோ நடிக்க வேண்டிய படம் என்பதால் சூர்யா நடிக்க மாட்டார் என கூறப்படுகிறது.

Trending

Exit mobile version