News

மீண்டும் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படம் !

Published

on

சூர்யா நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் பாலா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இவர்களின் கூட்டணியில் தந்தா, பிதாமகன், ஆகிய படங்களில் வெளியாகியுள்ளது.

இப்படம் வெளியாகி 18 ஆண்டுகள் கழித்து மீண்டும் மூன்றாவது முறையாக இப்படத்தின் மூலம் இணைந்துள்ளனர். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

இப்படத்தை தவிர வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும் நடிக்கவுள்ளார். தமிழகத்தின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக கொண்டு இப்படம் உருவாகவுள்ளது.

இந்த நிலையில் சூரரை போற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகவுள்ளதாம். இப்படம் குறித்த மேலும் முழு விபரம் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Trending

Exit mobile version