News

சிவா இயக்கும் படத்தில் ஜந்து வேடங்களில் நடிக்கும் சூர்யா !

Published

on

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா தனது 42-வது படத்தில் நடித்து வருகிறார். கோவாவில் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ளது.

இரண்டு பாகங்களாக உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பை 160 நாட்களுக்குள் நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். சரித்திர கதையம்சம் கொண்ட இப்படம் 10 மொழிகளில் தயாராகி வருகிறது.

இந்த நிலையில் இப்படத்தில் சூர்யா காட்டார், முக்காட்டார், அரத்தார், மாண்டாங்கர், பெருமனத்தார் என 5 கேரக்டர்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க 3டி தொழிநுட்பத்தில் உருவாகும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதாணி நடித்து வருகிறார்.

Trending

Exit mobile version