News
சூர்யா நடிக்கும் கங்குவா ரிலீஸ் தேதி அறிவிப்பு !

சூர்யா நடிப்பில் இயக்குநர் சிவா இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் கங்குவா. இப்படத்தின் வெளியீட்டு தேதி இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என நேற்று படக்குழு அறிவித்திருந்தது.
ஸ்டூடியோ ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் அதிரடி ஆக்சன் கலந்த பேண்டஸி படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது என்றும் இதன் முதல் பாகம் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தது படக்குழு.
ஆனால் அதே தேதியில் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் வெளியாவதால். கங்குவா படத்தின் வெளியீட்டு தேதி தற்போது தள்ளி போகிறது. அதன் படி கங்குவா திரைப்படம் நவம்பர் 12-ம் தேதி வெளியாகும் என ஒரு வீடியோ ப்ரோமோவுடன் படக்குழு அறிவித்துள்ளது.