News
வாடிவாசல் தாமத்தால் சூர்யா எடுத்த முடிவு !

இயக்குநர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளதாம். இப்படம் சூர்யாவின் 41-வது திரைப்படமாகும்.
இயக்குநர் வெற்றிமாறன் தற்போது ‘விடுதலை’ படத்தில் பிஸியாக இருப்பதால் ‘வாடிவாசல்’ திரைப்படத்தை தொடங்குவதில் சற்று தாமதம் ஆகும் என கூறப்படுகிறது.
இதனால் சூர்யா ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் உடன் ஒரு திரைப்படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் இப்படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.மிக குறைந்த காலகட்டத்திலும் குறைந்த பொருட் செலவிலும் இப்படத்தை எடுத்து முடிக்க திட்டமிட்டுளனராம்.