News

கோல்டன் குளோப் விருதுக்கு செல்லும் சூர்யாவின் ஜெய்பீம் !

Published

on

சூர்யா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ஜெய்பீம். வெளியான நாள் முதல் இன்று முதல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.காவல் நிலையில் ராஜாக்கண்ணு என்னும் ஒருவரை அடித்து சித்ரவதை செய்யப்பட்ட உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியிருந்தது.

இதில் சூர்யா பழங்குடி மக்களுக்காக போராடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார். பிரகாஷ், மணிகண்டன், லிஜோ மோல் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தில் சர்ச்சை காட்சிகள் இருப்பதாக கூறி சிலர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். சிலர் இப்படத்திற்கு விருது வழங்கக்கூடாது என்று மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் கடிதமும் அனுப்பியுள்ளனர்.

இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சில சூர்யா வீட்டை தாக்கக்கூடும் என்று போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது சூர்யாவுக்கு.

இந்த நிலையில் தற்போது ஜெய்பீம் படத்திற்கு அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் கோல்டன் குளோப் விருது விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் நடைபெறும் முக்கியமான திரைப்பட விழாக்களில் கோல்டன் குளோப் விழாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் ஜெய்பீம் சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களுக்கான போட்டி பிரிவில் திரையிடப்படுகிறது.

Trending

Exit mobile version