Connect with us
 

Reviews

ஸ்வீட் ஹார்ட் – திரைவிமர்சனம் !

Published

on

Cast: Rio Raj, Gopika Ramesh, Renji Panicker, Redin Kingsley, Arunachaleswaran.PA, Fouziee
Production: YSR Films
Director: Swineeth S.Sukumar
Cinematography: Balaji Subramanyam
Editing:
Music: Tamil Arasan
Language: Tamil
Runtime: 2H 24Mins
Release Date: 14 March 2025

ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து ரியோ ராஜ் நடிப்பில் வெளிவரவிருக்கும் இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. சையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்து, இசையமைத்துள்ள திரைப்படம் ஸ்வீட் ஹார்ட். மேலும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கியுள்ளார்.

கதை களம்

தனது 5 வயதில் கதாநாயகன் ரியோவின் தாய்யை பிரிக்கிறார். 12 வயதில் தனது தந்தையை இழக்கிறார். சிறு வயதில் இருந்தே தனியாக வளர்ந்து வரும் ரியோ, ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து இறுதி வரை காதலோடு வாழ முடியாது என்கிற மனநிலைக்கு வருகிறார். காலங்கள் செல்ல, எதர்ச்சியாக கதாநாயகி கோபிகாவை (மனு) சந்திக்கிறார். இருவரும் பேசி பழகி வரும் நிலையில், கோபிகாவிற்கு ரியோ மீது காதல் வருகிறது. ஆனால், ரியோ அந்த காதலை தவிர்த்து வருகிறார்.

ஒரு கட்டத்தில் இருவரும் தங்களது காதலை உறுதி செய்ய, நெருங்கிய உறவில் ஈடுபடுகிறார்கள். இதனால் கோபிகா கர்ப்பமாகிறார். இந்த குழந்தை தனக்கு வேண்டும் என கோபிகா சொல்ல, இல்லை இந்த குழந்தையை களைத்து விடலாம் என ரியோ கூறுகிறார். இதன்பின் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதி கதை.

படம் எப்படி இருக்கு

நடிகர் ரியோ மற்றும் நடிகை கோபிகா இருவருடைய நடிப்பும் இந்த படத்திற்கு மிக பெரிய பலம். இருவருக்கும் இடையே வரும் வாக்குவாதங்கள், ரொமான்ஸ் மற்றும் பிரேக் அப் பின் உடைந்து ஆளும் காட்சிகள் என அனைத்திலும் இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர். மேலும் மற்ற நடிகர்கள் மற்றும் நடிகைகளின் நடிப்பும் கவனத்தை பெறுகிறது.குறிப்பாக ண்பராக வரும் அருணாச்சலேஸ்வரன், தன் உடல்மொழியாலும் கவுன்ட்டர்களாலும் படத்தின் காமெடி லேவேலை அடுத்த கட்டத்துக்கு செலுக்கிறது.

அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ் சுகுமார் எடுத்துக்கொண்ட கதைக்களம் இன்றைய இளைஞர்களை கவரும் வகையில் உள்ளது. முதல் பாதி திரைக்கதை மெதுவாக இருந்தாலும், இரண்டாம் பாதி விறுவிறுப்பாக உள்ளது.

இசையமைபாலர் யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை மற்றும், பாடல்களால் நம்மை வேறொரு உலகத்திற்கு கொண்டு சென்றுவிட்டார்.

மேலும் பாலாஜி சுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு கலர்ஃபுல்லான, துறுதுறுப்பான முதற்பாதி திரைக்கதைக்குத் தேவையான திரைமொழியைக் கொண்டுவந்திருக்கிறது. இதை தொடர்ந்து நான்-லீனியர் பாணி திரைக்கதையை, அதன் பரபரப்பும், துள்ளலும் குழையாமல் கோர்த்திருக்கிறார் படத்தொகுப்பாளர் தமிழரசன்.

மேலும் குறிப்பாக கடைசி 35 நிமிடங்களில் வரும் எமோஷனல் காட்சிகள் நம்மை கலங்க வைக்கிறது. மேலும் கிளைமாக்ஸ் படத்தின் மிகப்பெரிய பலம் என்பது குறிப்பிடத்தக்கது.

பிளஸ்
நடிகர் & நடிகை, திரைக்கதை ,அருணாசலம் காமெடி மற்றும் யுவன் இசை

மைனஸ்
கதையின் முதற்பாதி திரைக்கதை மற்றும் சுரேஷ் சகரவதி தேவையற்ற வசனம்.

மொத்தத்தில் ஸ்வீட்ஹார்ட் – ஸ்வரசையமான காதல் கதை.

Rating 3/5

 

 

Continue Reading