News
ஆர்யா போல் பேசி ஜெர்மனி பெண்ணிடம் மோசடி செய்தவர்கள் கைது !

ஜெர்மனி நாட்டை சேர்ந்த இலங்கைப்பெண் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடி அலுவலகத்துக்கு புகார் மனு ஒன்றை அனுப்பினார். அந்த முனிவில் தமிழ் நடிகர் ஆர்யா தன்னிடம் பழகி திருமணம் செய்வதாக கூறி ரூ.70 லட்சம் பணத்தை மோசடி செய்துவிட்டதாகவும் அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். அந்த புகார் மனு தமிழக அரசுக்குஅனுப்பு வைக்கப்பட்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரால் விசாரிக்கப்பட்டது.
இது தொடர்பாக ஆர்யாவை நேரில் அழைத்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் போது நடிகர் ஆர்யா தன்மீது கொடுக்கப்பட்ட புகார் தவறானது என்றும் ஜெர்மனி பெண்ணை யார் என்றே தெரியாது எனக்கு என்றும் தெரிவித்தார்.
நடிகர் ஆர்யா போல பேசி ஜெர்மனி நாட்டு பெண்ணிடம் ரூ.70 லட்சம் மோசடி செய்யததாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் விசாரணையில் இந்த வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.
போலீஸ் விசாரணையிலும் ஆர்யா சொன்னது அனைத்தும் உண்மைதான் என்று தற்போது தெரியவந்துள்ளாது. ஆர்யா போல பேசி ஜெர்மனி பெண்ணிடம் மோசடி செய்த நபர் யார் என்று போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் சென்னை புளியந்தோப்பை சேர்ந்த முகமது அர்மான் என்பவர்தான் ஜெர்மனி பெண்ணிடம் நடிகரஆர்யா என்று தன்னை சமூகவலைதளம் வாயிலாக அறிமுகப்படுத்திக்கொண்டு பழகி திருமண ஆசைகாட்டி 70 லட்சம் பணத்தை சுருட்டியது தெரியவந்துள்ளது. இதன்பேரிம் முகமது அர்மான் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்த மோசடிக்கு உடந்தையாக செயல்பட்ட முகமது அர்மானின் உறவினர் முகமது ஹூசைனி என்பவரும் கைதானார். ஜெர்மனி பெண்ணிடம் மோசடி செய்த பணத்தை அவர்களிடம் இருந்து மீட்க போலிசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.