News
அமெரிக்க ராணுவத்தில் இணைந்த தமிழ் நடிகை !

அமெரிக்காவை பிறப்பிடமாக கொண்ட தமிழ் பெண் அகிலா நாராயணன் இவர் தமிழில் வெளியான காதம்பரி என்ற படத்தில் நடித்திருந்தார். திகில் படமாக கடந்த வருடம் உருவாகி வெளியானது இப்படம். இதை இயக்குநர் அருள் என்பவர் இயக்கியிருந்தார்.
இந்த நிலையில் கடந்த பல மாதங்களாக அகிலா அமெரிக்க ராணுவத்தில் சேர கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். அதன் பயனாக இவருக்கு அமெரிக்க ராணுவத்தில் வழக்கறிஞர் பணியில் சேர்ந்துள்ளார்.
தமிழ் நடிகை முதல் முறையாக அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்தது இதுவே முதல் முறை இந்த பெருமை அகிலா நாரயணனுக்கே கிடைத்துள்ளது. இவருக்கு தற்போது அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.