News
காஜல் அகர்வால் கர்ப்பம்?

தமிழ் மற்றும் ஹெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார் காஜல் அகர்வால் கடந்த வருடம் இவர் பிரபல தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னரும் பல படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் பாரிஸ் பாரிஸ், ஹேய் சினாமிகா, கருங்காப்பியம், கோஷ்டி ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். தெலுங்குல் சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா மற்றும் கோஸ்ட் படங்களில் நடித்து வருகிறார். கமல்ஹாசனுக்கு ஜோடியாக இந்தியன் 2 படத்திலும் நடித்துள்ளார்.
கணவர் விரும்பினால் சினிமாவை விட்டு விலகிவிடுவேன் என்று திருமணம் ஆனவுடன் அறிவித்திருந்தார் காஜல். இந்த நிலையில் தற்போது 36 வயதாகும் காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக தெலுங்கு இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது. இதனையடுத்து பல ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
காஜல் அகர்வால் தற்போது சினிமாவில் இருந்து தற்காலிமாக ஓய்வு எடுப்பதாகவும் கூறப்படுகிறது.