News
நடிகை ரவீனாவின் தந்தை ரவீந்திரநாத் திடீர் மரணம் !

பிரபல டப்பிங் கலைஞர் ஶ்ரீஜா இவர் பல முன்னணி நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். இவரது மகள் ரவீனா ரவி இவர் ஒரு டப்பிங் கலைஞர் மற்றும் நடிகை. 2017-ம் ஆண்டு வெளியான ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து கடந்த ஆண்டு காவல்துறை உங்கள் நண்பன் என்ற படத்திலும் நடித்தார்.
இவர் இன்றைய முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் கொடுத்துள்ளார். ஜ படத்தில் எமி ஜாக்சனுக்கு, மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனுக்கும், ஈஸ்வர படத்தில் நிதி அகர்வாலுக்கும் என பல நடிகைகளுக்கு டப்பிங் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் ஶ்ரீஜாவின் கணவரும் ரவீனாவின் தந்தையுமான ரவீந்திரநாத் திடீரென காலமாகியுள்ளார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ரவீந்திரநாத் சிகிசை பலனின்று காலமாகியுள்ளார்.
ரவீந்திரநாத்தின் இறுதி சடங்கு கேரளாவில் நடைபெறவுள்ளது. ரவீனாவின் தந்தை மறைவிற்கு நடிகர் விஷால் உற்பட பல சினிமா பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.