News

கார்த்திக்கு வில்லியாக களமிறங்கும் நடிகை சிம்ரன் !

Published

on

தமிழ் திரையுலகில் 1990 மற்றும் 2000-களில் முன்னணி கதா நாயகியாக வலம் வந்த சிம்ரன் திருமணதுக்கு பிறகு சிறிய காலம் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார். பின்னர் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

புதிய படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். வில்லி வேடங்களாஇயும் ஏற்று நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான சீமாராஜா படத்தில் வில்லியாக நடித்து அசத்தியிருப்பார்.

பிரசாந்த் நடித்துவரும் அந்தகன் படத்தில் கள்ளக் காதலுக்காக கணவனை கொலை செய்யும் கொடூர வில்லியாக நடித்துவருகிறார். இந்தி படத்தின் தமிழ் ரீமேக்காக இது தற்போது தயாராகி வருகிறது. இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் சர்தார் படத்தில் கார்த்திக்கு வில்லியாக நடிக்கவும் சிம்ரனுக்கு வாய்ப்பு வந்துள்ளதாம். இந்த படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கி வருகிறார். ராஷி கன்னா நாயகியாக நடித்து வருகிறார். சர்தார் படத்தில் கார்த்தி இரு வேடங்களில் நடிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் சிம்ரனை படத்தில் கார்த்திக்கு வில்லியாக நடிக்க வைக்க தற்போது வில்லியாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

Trending

Exit mobile version