News
வலிமை வெளியீட்டு திட்டத்தை மாற்றிய படக்குழு !

அஜித்குமாரின் வலிமை படப்பிடிப்பு சமீபத்தில் ரஷ்யாவில் நடந்த சண்டை காட்சியோடு முடிந்துள்ளது. தற்போது தொழிநுட்ப பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
வலிமை படம் வருகிற தீபாவளி பண்டிகையில் திரைக்கு வர அதிக வாய்ப்புள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. தீபாவளியில் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படமும் வெளியாகவுள்ளதால் இரண்டு படங்களில் ரசிகர்களும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்த நிலையில் தீபாவளிக்கு பதிலாக டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையில் வலிமை படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணாத்த படம் வெளியாகும் நாளில் வலிமை படத்தை வெளியிட்டால் வசூல் பாதிக்கும் என்பதால் வலிமை படத்தின் வெளியீட்டு தேதியை தள்ளி வைக்க யோசித்து வருகிறார்களாம் வலிமை படக்குழு.
எச்.வினோத் இயக்கும் இப்படத்தில் அஜித் ஒரு அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக காலா படத்தின் நாயகி ஜூமா குரோஷி நடித்துள்ளார்.