Connect with us
 

News

அக்டோபரில் ஆரம்பமாகும் தல 61 படத்தின் படப்பிடிப்பு !

Published

on

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் அஜித் குமாரின் வலிமை திரைப்படம். எச்.வினோத் இயக்கும் இப்படத்தை நடிகை ஶ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஜூமா குரேசி நடிக்க வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறார். அஜித்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தையடுத்து அஜித் நடிக்கும் 61-வது படத்தை எச்.வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கவுள்ளனராம். இந்த படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்துவிட்ட நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதத்தில் படப்பிடிப்பை ஆரம்பிக்கவுள்ளரனர்.