News
திரெளபதிய விட ருத்ரதாண்டவம் படத்தை மக்கள் அதிகம் வரவேற்பார்கள் – ஹெச் ராஜா கருத்து !

இயக்குநர் மோகன்ஜி இயக்கத்தில் நடிகர் ரிச்சட் நடிகை தர்ஷா குப்தா இயக்குநர் கெளதம் மேனன் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ருத்ரதாண்டவம். அக்டோபர் 1-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது. இன்று பா.ஜ.கவின் எச்.ராஜா, புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, இந்து மக்கள் கட்சியின் அர்ஜூன் சம்பத் மற்றும் வேலூர் இப்ராஹிம் உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கு இப்படம் இன்று சிறப்பு காட்சியாக திரையில் காட்டப்பட்டது.
படம் பார்த்து முடித்து விட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசிய எச்.ராஜா உண்மையான உத்ரதாண்டவத்தை பார்த்தோம் சினிமா என்பதி பொழுபோக்கு மட்டுமல்ல. மக்களை நல்ல வழியில் கொண்டு செல்ல வைக்க வேண்டும். சமூக ரீதியாக சட்ட ரீதியான ஒரு முயற்சி இந்த படத்தை பொறுத்தவரையில் மூன்று விஷயங்களை தம்பி மோகன் ஜி பேசியுள்ளார். ஒன்று 18 வயதுக்கு கீழ் உள்ள பெண் பிள்ளைகள் படிக்கிற காலத்துல படிக்க மட்டும்தான் கவனம் செலுத்த வேண்டும். காதல் பாடத்தில் அல்ல என்ற கருத்தை ஆழமாக இப்படத்தில் கூறியுள்ளார்.
இரண்டாவதாக இளைஞர்கள் போதை பொருளால் சீரழிந்து போகிறார்கள். 30 ஆண்டுக்கு முன்னர் பிள்ளை பெறுவது எந்த ஒரு மருத்துவ ஆப்ரேஷனும் இல்லாமல் இருந்தது இன்று செயற்கை கருத்தரிப்பு மையங்களை பார்க்கிறோம். இதற்கு எல்லாம் முக்கிய காரணம் போதை கலாச்சாரம். அதை இளைஞர்களுக்கு புரிய வைக்கும் படமாக கண்டிப்பாக இருக்கும்.
மூன்றாவதாக சட்டத்தை தவறாக உயயோகிக்கும் பலரை முகத்திரையை கிழித்து காட்டியுள்ளார். இப்படம் எந்த மதத்தையும் ஜாஜிதையும் இழிவாக பேசவில்லை. சமூகத்திற்க்கு மிகவும் தேவையான ஒரு நல்ல திரைப்படத்தை மோகன்ஜியும் அவரது குழுவும் கொடுத்துள்ளனர்.
மோகன்ஜின் முதல் படமான திரெளபதியை போல இப்படத்தையும் பன் படங்கு மக்கள் வரவேற்று கொண்டாடுவார்கள். இந்தப்படம் கிறிஸ்துவர்களை பெருமைப்படுத்தியுள்ளது. யாரையும் இழிவுபடுத்தவில்லை அதே சமயம் சாதாரண ஒரு சட்ட ஒழுங்கு பிரச்சினையை ஜாதி பிரச்சனையாக மாற்றுபவர்களை எச்சரித்துள்ளது இப்படம் என்றும் கூறினார்.