பெங்களூரில் இருந்து சென்னையுள்ள ஒரு ஜடி கம்பெனிக்கு இட பணிமாற்றம் செய்து வருகிறார் படத்தின் நாயகன் கவின். அந்த ஜடி கம்பெனிக்கு டீம் தலைவராக வருகிறார். பல மாதங்களாக முடிக்கப்படாமல் இருக்கும் ஒரு வேலையை விரைவில் முடித்து கொடுக்க வேண்டும் என்ற பொறுப்பையும் கவினுக்கு வழங்கப்படுகிறது.
அதெ கம்பெனியில் எச்.ஆராக வேலை பார்த்து வருகிறார் படத்தின் நாயகியான அம்ரிதா. கவின் மற்றும் அம்ரிதா இருவரும் பெங்களூருவில் பணி புரியும் போதும் சிறிய மோதல் இருப்பது போல நமக்கு காட்டப்படுகிறது.
என்னதன் எலியும் புனையுமாக இருந்தாலும் அம்ரிதாவுக்கு ஒரு கட்டத்தில் கவின் மேல் காதல் வர அதை கவினிடம் சொல்ல அதெல்லம் எனக்கு இல்ல வேணும்னா உன்ன அக்கானு சொல்றனு சொல்லிவிட்டு செல்கிறார் கவின்.
இப்படி செல்லும் கவின் வாழ்க்கை ஒரு நால் இரவு கம்பெனியின் முக்கியமான வேலையை இன்று இரவுக்குள் முடிக்க வேண்டும் என்ற இக்கட்டான சூழல் வருகிறது. அந்த வேலையை அன்று இரவு முடித்து விட்டு வீட்டுக்கு செல்ல திரும்புகிறார் கவின். லிப்டில் செல்லலாம் என்று செல்லும் கவினுக்கு அந்த லிப்டில் பல அமானுஷ்யமான சம்பவங்கள் நடக்கின்றன.
அங்கு இருந்து உயிரை பிடித்துக்கொண்டு ஓடும் கவின் ஒரு கட்டத்தில் அந்தே கம்பெனியில் ஒரு அறையில் நடிகை அம்ரிதா ஐயரும் அடைபட்டு இருப்பத்தை பார்க்கிறார். கதவை திறந்து அம்ரிதாவை காப்பாற்றும் கவினை பார்த்து ஏன்டா என்ன அறையில் வைத்து பூட்டின என கேட்கும் அம்ரிதா. அதற்கு கவின் நான் உன்னை பூட்ட வில்லை இங்கு நிறைய அமானுஷ்யமான சம்பவங்கள் நடக்கின்றது என கூறுகிறார். இதை நம்மாத அம்ரிதா லிப்டிற்கு போகலாம்னு என அடித்தளத்திற்கு செல்ல லிப்டிற்குல் செல்கிறார் பின்னர் அங்கு அந்த அமானுஷ்யமான சம்பவம் அவருக்கும் ந்டக்கிறது இதன் பின்னர் அங்கு பேய் இருக்கிறது என்று நம்புகிறார். இதற்கு பின்னர் அங்கு இருந்து இவர்கள் உயிருடன் வெளியில் வந்தார்களா இல்லையா? யார் அந்த பேய் எதற்காக இவர்களை கொலை செய்ய வருகிறது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
படத்தின் நாயகனாக வரும் கவின் துரு துரு என அழகான ஒரு ஜடி பையனாக நம்மை மிகவும் கவர்கிறார். குறிப்பாக கவின் கோபம், பயம், கொஞ்சம் நகைச்சுவை என தன் நடிப்பில் 100 சதவீதம் நடிப்பை கொடுத்துள்ளார்.Sathees Kumar – Cinetimee
நாயகியாக வரும் நடிகை அம்ரிதா ஜயர் அழகிலும் சரி நடிப்பிலும் சரி கவினுக்கு சமமாக நடித்துள்ளார். இவர் பயந்து நடுங்கும் காட்சி ஆகட்டும் கவினை கொலை செய்து விட்டு கதறி அழும் காட்சி ஆகட்டும் சரி நடிப்பால் நம்மை மிகவும் கவர்கிறார்.
படத்தின் கேமரா மற்றும் ஒளிப்பதிவு மிகவும் சிறப்பாக இருக்கிறது. இசை மற்றும் பின்னணி இசை பல இடங்களில் நம்மை பின்னணி இசை மூலமே பயம் காட்டியிருக்கிறார்கள். படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டுமே வருகிறது. இன்னா மயிலு பாடல் படத்தின் முடிவில் மட்டுமே வருகிறது அதுவெ படத்திற்கு ஒரு மிகப்பெரிய பிளஸ் என்று சொல்லலாம்.
ஜடி கம்பெனிகள் தங்களின் பணியாளர்களுக்கு கொடுக்கும் வேலையில் சுமை, மன உளைச்சல் அதனால் ஏற்படும் தற்கொலைகள் என்று ஒரு சோசியல் மெசேஜ்ஜை சொல்லி இருக்கிறார் இயக்குநர்
வினித் வரப்பிரசாத்.
படத்தின் மைனஸ் :-
திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் சற்று கவனம் செலுத்தி இருக்கலாமோ படத்தின் வேகத்தை இன்னும் கூட்டியிருக்கலாமே என்று தோன்றுகிறது.
ஒரு பேய் படம் என்றால் Edge Of The Seat என்று சொல்லும் அளவிற்கு படத்தில் எந்த ஒரு காட்சியும் இல்லை என்பது உண்மை.
படத்தில் சில லாஜிக் மீறல்கள் உள்ளது அதிலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் அவ்வளவு மரண பயத்திலும் கையில் லைட்டரை வைத்து பிறந்த நாள் சொல்லும் காட்சி கொஞ்சம் ஓவர் இயக்குநர் சார்.
ஒரு கஞ்சாவை வைத்து பேயை விரட்டுவது தமிழ் சினிமா பேய் படங்களில் கொஞ்சம் புதிதுதான் ஆனா இருந்தாலும் கொஞ்சம் ஓவராகத்தான் தெரிகிறது.